நெல்லையில் மகன் இறந்த வேதனையில் தொழிலாளி தற்கொலை
1 min readWorker commits suicide in grief over son’s death in Nellai
26/10/2020
நெல்லை அருகே மகன் இறந்த வேதனையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த காட்டாம் புலி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 58). தொழிலாளி. இவரது மகன் சார்லஸ்.
இவர் கடந்த ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் இருந்தே குழந்தைசாமி மகன் நினைவாகவே இருந்து வந்தார். மேலும் இதுதொடர்பாக அடிக்கடி தற்கொலை செய்ய போவதாகவும் குடும்பத்தினரிடம் கூறி வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை சாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மேகின் மேரி சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.