நாளைய (செவ்வாய்க்கிழமை)தினத்தின் சிறப்பு
1 min read
26/10/2020
Tomorrow (Tuesday) Specia
ஒவ்வொரு நாளும் சிறப்பானதாக இருக்கும். சில நாட்கள் வழிபாட்டுக்கு உரியதாக இருக்கும். சில நாட்கள் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியை நடத்தலாம். இன்னும் அபூர்வமான நாட்களில் அமைதியை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் மாதம் இருமுறை ஏகாதசிக்கு தனிசிறப்பு உண்டு. ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவம் பெற்றதாக இருக்கும். அந்த வகையில் நாளை (செய்வாய்க்கிழமை) வரும் ஏகாதசித பாபாங்குச ஏகாதசி என்று பெயர்.
புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் ஏகாதசிக்கு பாபாங்குச ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் நாம் விரதம் இருந்து இறைவனை வழிபடுபவன் நம்முடைய எல்லா பாவங்களில் இருந்து விடுபட்டு சுகமாக வாழ்வான். மேலும் எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலனையும், அன்னம், வஸ்திரம், தங்கம் போன்றவற்றை தானம் செய்த பலனையும் பெறுவார்கள். இந்த சிறப்புக்குரிய நாள் அக்டோபர் 27-ந் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.