நடிகை குஷ்பு கைதாகி விடுதலை
1 min readActress Khushbu arrested and released
27/10/2020
நடிகை குஷ்பு போராட்டம் நடத்த சென்றபோது கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் அந்தக் கட்சியில் சேர்ந்த சில நாட்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் இந்து பெண்கள் பற்றி மனு ஸ்ருதியில் கூறப்பட்டிருந்தது பற்றி பேசியதற்கு முதலில் குஷ்புதான் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து சிதம்பரத்தில் பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கு போலீஸ் அனுமதி அளிக்கிவல்லை.ங
இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க நடிகை குஷ்பு சிதம்பரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குஷ்பு உள்பட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.
பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.
அதனி குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல…
மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி உயர்வாக பேசியுள்ள பகுதிகள் திருமாவளவனுக்கு தெரியவில்லை. பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம்.
தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது. கடலூர் வரை போக வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைத்தோம். இது கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல. ஒரு பெண் என்ற ரீதியில் போராட வந்துள்ளேன். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் எதிரான கருத்து. ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கொள்கைகளை வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார், மதிக்காத இடத்தில் கடவுள் இருக்கமாட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.