கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
1 min readCurfew extended in Corona controlled areas till November 30 – Federal Government announcement
27-/10/2020
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சிற்சிலவற்றில் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பஸ்போக்குவரத்து மற்றும் முக்கிய இடங்களுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்று பள்ளிக்கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ந் தேதி (சனிக்கிழமை)யுடன் நிறைவடைகிறது.
நீடிப்பு
இந்த நிலையில், ஊரடங்கு தளர்வு தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
ஊரடங்கு தளர்வு 5.0-வில் என்னென்ன தளர்வுகள் அமலில் இருந்ததோ அவை 6.0-விலும் அப்படியே தொடரும்.
குறிப்பாக, மெட்ரோ ரெயில் சேவை, கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி, திரையரங்குகள் செயல்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி போன்ற ஊரடங்கு தளர்வு 5.0-வில் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், கண்டெய்ன்மெண்ட் சோன் எனப்படும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் மக்கள், வாகனங்கள் சென்றுவர எந்த வித இ-பாஸ் அல்லது அனுமதி தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.