May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

சமையல் எரிவாயு பதிவு செய்ய இந்தியா முழுவதும் ஒரே எண்

1 min read

The only number across India to register cooking gas

29/10/2020

வீடுகளுக்கான சமையல் எரிவாயு (கியாஸ் சிலிண்டர்) பதிவு செய்ய இந்தியா முழுவதும் ஒரே எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமையல் எரிவாயு

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.

இந்த நிலையில் வருகிற (நவம்பர்) 1-ந் தேதிமுதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர்முன்பதிவு செய்யலாம். இந்தப் புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமமும் இன்றி செய்யலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.