May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு நுரையீரல் பரிசோதனை

1 min read

Lung examination for those recovering from corona

29/10/2020

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு நுரையீரல் பரிசோதனையை சென்னை ஓமந்தூரார் மருத்துமனை செய்துள்ளது.

கொரோனா

கொரோனா ஒருமுறை ஒருவரை தாக்கினால் மீண்டும் வராது என்று சிலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் உடலில் 4 மாதங்கள் மட்டும்தான் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்றும் அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா வரலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்களில் உடலில் பெரும் பாதிப்புகள் தொடரத்தான் செய்யும் என்று வெளிநாட்டில் இருந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது உண்மை அல்ல என்பது சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரி எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பரிசோதனை

சென்னை, ஓமாந்தூரார் எஸ்டேட், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ-சுகாதாரப் பணியாளர்கள், கோவிட்-19 சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் நுரையீரல் தன்மை, இருதய திறன் ஆகியவற்றை பரிசோதித்து வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து மீண்டு நலம் பெற்றவர்களின் நுரையீரல் தன்மையையும் இருதய ஆரோக்கியத்தையும் பரிசோதிக்க அவர்களை 6 நிமிடம் நடக்க வைக்கின்றனர். பிறகு பிளாட்பார்ம் ஒன்றில் மேலும் கீழும் ஏறி இறங்குமாறு செய்கின்றனர். நுரையீரல் நிலையை நெருக்கமாக அவதானிக்க சிடி மார்பு ஸ்கேன் எடுக்கின்றனர்.

98 சதவீதம்

இதில் 98 சதவீதம் நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பிலிருந்து நுரையீரல் குணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது

6 நிமிட நடைப்பயிற்சி, ஹார்வர்டு ஸ்டெப் டெஸ்ட் மற்றும் இசிஜி ஆகியவை கோவிட் 19 நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மேற்கோள்ளப்படும் பரிசோதனைகளாகும். டிஸ்சார்ஜ் ஆகி 6 வாரங்களுக்குப் பிறகு நோயாளிகளுக்கு மீண்டும் சோதனை செய்து நுரையீரல், இருதயம், கண்கள் ஆகியவற்றின் செயற்பாட்டுத்திறனை அறுதியிடுகின்றனர். இதோடு உளவியல் ரீதியாக அவர்கள் எப்படி உணர்கின்றனர் என்பதும் அறுதியிடப்படுகிறது என்று சென்னை மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.

பேட்டி

மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி தி இந்து ஆங்கிலம் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவிட்டுக்குப் பிந்தைய புறநோயாளிகள் பிரிவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவரகளுக்கென்றே டெஸ்ட் செய்யும் வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நடக்க வைத்து நுரையீரல் செயல்பாட்டை நாங்கள் அறுதியிடுகிறோம். டெஸ்ட்டுக்கு முன்னும் பின்னும் பிராணவாயு அளவு, இருதய துடிப்பு ஆகியவற்றை அளவிடுகிறோம். ஹார்வர்ட் டெஸ்ட் என்பது எந்த அளவுக்கு அவர்களால் நடக்க முடிகிறது அவர்களின் உச்சபட்ச பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவு என்ன என்பதை அறுதியிடும் அடிப்படை டெஸ்ட் ஆகும் நுரையீரல் மற்றும் இருதயத் திறனை அளவிடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Lung examination for those recovering from corona

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.