தமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா
1 min readCorona for 2,511 people in Tamil Nadu today
31/10/2020
தமிழகத்தில் இன்று புதிதாக 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) மட்டும் புதிதாக 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 24 ஆயிரத்து 522 ஆக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 3,848 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 91 ஆயிரத்து 236 ஆக உயர்ந்துள்ளது.