June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகை நமீதா மீண்டும் பிசியானார்

1 min read

Actress Namitha is busy again

8/11/2020

உடல் எடை கூடியதால் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை நமீதா தற்போது மீண்டும் தற்போது பிசியாகிவிட்டார்.

நடிகை நமீதா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நமீதா. கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா எப்போதும் பிசியாக இருந்தார். இந்த நிலையில் அவரது உடல் எடை அதிகரித்ததால் சினிமா வாய்ப்பு எதிர்பார்த்தப்படி கிடைக்கவில்லை. இதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அதன்பின்னர் தனது எடையை நமீதா குறைத்துவிட்டார். ஆனாலும் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் நடிப்பதை குறைத்து தீவிர அரசியலில் இறங்கினார்.
மீண்டும் பிசி

அ.தி.மு.க.வில் இணைந்தவர் அங்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் பாரதீய ஜனதாவில் இணைந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் பவ் வவ் என்ற படத்தில் பிளாக்கர் வேடத்தில் நடித்து வருகிறார். திருவனந்தபுரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.