June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 13 people in Tenkasi district

12/11/2020

தென்காசி மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்திற்கு இதுவரை 16,295 பேர்கள் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையத்தில் ஒருவர் உள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1,25,707 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 737 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 10 பேர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டனர்.

13 பேர்

இன்று (வியாழக்கிழமை) 13 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலங்குளத்தில் ஒருவரும், கீழப்பாவூர் 2 பேர், குருவி குளத்தில் 3 பேர், செங்கோட்டையில் 2 பேர், தென்காசியில் 5 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
39 பே கொரோனா அறிகுறியுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்தனர். 2 பேர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,915 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பூர்ண குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,681 ஆக உள்ளது.
இன்று மட்டும் 4 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்டனர். 79 பேர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *