July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 துலாம்

1 min read

Kuru peyarchi Palankal 2020-2021 Libra


துலாக்கோல் போல் எப்பக்கமும் சாயாமல் நீதியின் பக்கம் நிற்கும் துலாம் ராசி அன்பர்களே! நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்- கள். சிறந்த நண்பர்களையும், நல்ல உறவினர்களை -யும் பெற்றிருப்பீர்கள். குருபகவான் இதுவரை 3-ம் இடத்தில் இருந்தார்.அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு 4-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால பலன்களில் இருந்து இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மனஉளச்சலை -யும், உறவினர்வகையில் வீண்பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம். மேலும் இங்கு குருபகவான் நீண்டநாட்கள் நீடிக்க மாட்டார். அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
வீட்டினுள்சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கவனம் தேவை.ஆனால் சனிபகவான் நற்பலனை தருவார். இதனால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குரு நற்பலனை தருவார். இதனால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். தம்பதியினரிடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
உத்தியோகம் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். அதிக உழைப்பை சிந்தவேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற மதிப்பும்,மரியாதையும் கிடைக்கும்.மேல அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை குரு உயர்வை தருவார். உத்தியோகம் சிறப்படையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம் சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பொருள் சேரும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப் படவில்லை. எது எப்படியானாலும் குருவின் பலத்தால் அவை அனைத்தையும் முறிடிக்கும் வல்லமை கிடைக்கும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை விரும்பிய பாடங்களை பெறுவர். ஆசிரியர்- களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். வெற்றி பெறுவர்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். கோழி, ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. டிசம்பர்26-ந் தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.4-4-2021 முதல் 14-9-2021 வரை குடும்பத்தில் சிறப்பு பெறுவர். குதூகலம் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
பெண்கள் பொதுவாக எந்த பிரச்சினையிலும் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்கள் வகை- யில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் இடமாற்றத்தை காணலாம்.வேலையில் அக்கறையுடன் இருக்கவும்.
உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம்.
பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள்.வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பைரவரை வணங்கி வாருங்கள். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வணங்குங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.