சித்திரா பவுர்ணமியின் சிறப்புகள்
1 min readHighlights of Chitra Pournami
ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. ஒவ்வொரு மாத பவுர்ணமியையொட்டி சில நட்சத்திரத்திற்கும் தொடர்பு இருக்கும். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம், வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் என ஒவ்வொரு நட்சத்திரத்துடனும் இணைப்பு இருக்கும். இதில் வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை, தை மாதம் தைப்பூசம், பங்குனி மாதம் பங்குனி உத்திரம் ஆகிய புண்ணிய நாட்கள் பெருமான்மையான மக்கள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாக இருக்கிறது.
அந்த வகையில் சித்திரை மாதம் நிகழும் சித்திரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது. பூமி சூரியனை சுற்றி வந்தாலும் நம் கண்ணுக்கு சூரியன்தான் பூமியை சுற்றிவருவதாக தெரியும். அந்த வகையில் சூரியன் பூமியின் அருகே வரும். அதனால்தான் பூமியில் வெப்பம் அதிகமாக இருக்கும். பூமியை சந்திரன் சுற்றுவதால் இந்த சித்திரை மாதம் வரும் பவுணர்மி நாளில் சந்திரன் பூமிக்கு அருகில் வரும். மேலும் சூரியனிடம் இருந்த ஒளியை பெற்றுத்தரும் சந்திரனும் பிரகாசமாக இருக்கும். அந்த நாளில் நிலவின் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும. அந்த வகையில் அறிவியல் பூர்வமாக சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி சிறப்பு பெறுகிறது.
மற்ற பவுர்ணமியில் முழுநிலவு அழகாகப் பிரகாசித்தாலும் அதில் உள்ள களங்கங்கள் மிக மெலிதாகக் காணக்கிடைக்கும். ஆனால் சித்ராபவுர்ணமி அன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாகப் பொழிந்து. கொஞ்சம்கூட களங்கமே காணப்படாமல் காட்சி அளிக்கும் அதனால் தான் சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதோடு தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்குச் சிறப்பு சேர்கிறது. சித்திரையின் வருகை வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கிறது. குளிர்க்காலம் முழுமையாக முடிந்து இதமான இளம் வெயில் தொடங்கும். மாம் பூக்கள் மலர்ந்து எங்கும் மணம் பரப்பும் அதோடு வேப்பம் பூக்களும் பூத்திருக்கும். இது வாழ்வில் இனிமையும் கசப்பும் இணைந்தேகாணப்படும். என்ற தத்துவத்தை விளக்குவதாக உள்ளது.
அந்த சித்திரா பவுர்ணமி நாளில்தான் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல் திருவண்ணாமலையில் கிரிவலமும் சித்திரா பவுர்ணமி நாளில் சிற்ப்பாக இருக்கும்.