தீபாவளியையொட்டி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்
1 min read
Rajinikanth meets fans on the occasion of Diwali
14/11/2020
தீபாவளியையொட்டி ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருவாய் என்றும் வரமாட்டார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.
கொரோனா கொரோனா பரவல் காரணமாக தற்போது ரஜினிகாந்த்து வெளியே வரவில்லை. அவர் தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார்.
ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.
சந்தித்தார்
இன்று( சனிக்கிழமை) தீபாவளி பண்டிகையையொட்டி ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கேட்டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டனர். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.
அதனால் அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாஸ்க் அணிந்தபடி, கேட்டிற்கு பின்னால் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. பின்னர் அனைவரையும் நோக்கி கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
ரஜினியை சந்தித்த உற்சாகத்தில் ரசிகர்கள் புறப்பட்டுச் சென்றனர். ரஜினி ரசிகர்களை நோக்கி கையசைத்தபோது எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தலைவா ஹேப்பி தீபாவளி, தலைவரின் லேட்டஸ்ட் தீபாவளி தரிசனம் என்றும் ரசிகர்கள் பலர் பதிவிட்டுள்ளனர்.