நடிகை கவுதமி வீட்டுக்குள் ஏறி குதித்த நபர் கைது
1 min read
Youth arrested who jumped into the Actress Gautami house
17/11/2020
நடிகை கவுதமியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை கவுதமி
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நடிகை கவுதமியின் வீடு உள்ளது.
அந்த வீட்டு வளாகத்துக்குள் நேற்று ( திங்கட்கிழமை) இரவு திடீரென சுவர் ஏறி குதித்து வாலிபர் ஒருவர் புகுந்தார்.
இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நீலாங்கரை போலீசார் வந்து அவரை விரட்டி பிடித்தனர்.
முதல்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் பெயர் பாண்டியன் என்பதும், பெயிண்டராக வேலை பார்ப்பதும் குடிபோதையில் சுவர் ஏறிக் குதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.