June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

புற்றுநோயால் அவதிபடும் நடிகர் தவசிக்கு ரஜினி ஆறுதல்

1 min read

Rajini consoles actor Thavasi who is suffering from cancer

18/11/2020

புற்று நோயால் அவதியுறும் நடிகர் தவசிக்கு நடிகர் ரஜினிகாந்த் போனில் பேசி ஆறுதல் கூறினார்.

நடிகர் தவசி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

குறிப்பாக நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா ஆகியோர் பணவுதவி செய்தனர்.

ரஜினி

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை பெற்று வரும் தவசியிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார். மேலும் தற்பொழுது மேற்கொண்டுவரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.