சினேகன் ஏற்படுத்திய விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
1 min read
Death of a young man injured in an accident caused by Sinegan
21/11/2020
சினிமா பாடலாசிரியர் சினேகன் ஏற்படுத்தய விபத்தில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார்.
விபத்து
தமிழ் சினிமா பாடலாசிரியரான சினேகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருண் பாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
சாவு
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அருண் பாண்டி சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்திருக்கிறார். கார் ஓட்டிச் சென்ற சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இளைஞர் அருண் பாண்டியன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.