June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

புற்றுநோயால் அவதிபட்ட நடிகர் தவசி மரணம்

1 min read

Actor Thavasi dies of cancer

23/11/2020
புற்று நோயால் அவதிப்பட்ட நடிகர் தவசி மரணம் அடைந்தார்.

நடிகர் தவசி

சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்தவர் தவசி. இவர் மேலும் பல படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ஆனாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் தந்தையாக நடித்து மிகவும் பிரபலமானார். இந்தப்படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்கிற ஒற்றை வசனம் மூலம் பிரபலமானவர்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார்.

புற்று நோய்

நடிகர் தவசிக்கு புற்று நோய் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வந்தார்.

அவருக்கு சிகிச்சைக்கு நிதிஉதவி செய்யுமாறு தவசி மற்றும் அவரின் மகன் கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு சினிமா பிரபலங்கள் உதவுமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தவசிக்கு நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா ஆகியோர் பண உதவி செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை பெற்று வரும் தவசியிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார். அவருக்கு அளித்துவரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

மரணம்

இந்த நிலையில் நடிகர் தவசி இன்று ( திங்கட்கிழமை) மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு நடிகர்-நடிகைகள் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.