May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆந்திராவில் மர்ம நோய்க்கு 270 பேர் பாதிப்பு

1 min read

270 affected by mysterious disease in Andhra Pradesh

6/12/2020

ஆந்திராவின் எலுரு என்ற நகரில் மர்ம நோய்க்கு 270 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மர்ம நோய்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுரு நகரில் மர்ம நோய் பரவி வருகிறது. அந்த நகரின் பல இடங்களில் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2 நாளில் மட்டும் சுமார் 270 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மயக்கம், தலைசுற்றல், நடுக்கம், குமட்டல், வாந்தி,கீழே விழுதல் போன்ற எற்படுகிறது.

இந்த நோய் ஒரே பகுதியில்தான் பரவி உள்ளது. ஆனாலும் இந்த நோய்க்கான காரணம் தெரிவியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

குடிநீர்…

இதற்கிடையே எலுரு பகுதியில் குடிநீரில் ரசாயன வேதிப்பொருள் நிறைந்த மாசுபட்ட நீர் கலந்திருக்கலாம் எனவும் அதனை குடித்ததால் தான் மக்களுக்கு இவ்வாறான பாதிப்புகள் ஏற்பாடிருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகிவருகிறது.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் அதிகமானோர் வீடு திரும்பிய நிலையில், எஞ்சியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நோய் பரவியதை அடுத்து மருத்து குழுவினர் எலுருவில் முகாமிட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் எந்த பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆந்திர சுகாதாரத்துறை மந்திரி அல நானி பார்த்து ஆறுதல் கூறினார், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள யாருக்கும் கொரோனோ தொற்று இல்லை.மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அவர் கூறினார்.

இந்த நோயால் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.