கடையத்தில் ஆ.ராசா உருவ பொம்மை எரிப்பு்; அ.தி.மு.க.வைச் சேர்ந்த 7 பேர் கைது
1 min readA.Rasa figurine toy burning in store; 7 arrested
8/12/2020
கடையத்தில் ஆ.ராசா உருவபொம்மை எரித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆ.ராசா
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது.
அந்தக் கட்சியைச் சேர்ந்த ராசா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேருக்குநேர் வாதம் நடத்த தயாரா என்று கேட்டார். மேலும் முதல்-அமைச்சர் அவதூறாக பேசியதாக கூறி அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
உருவ பொம்மை எரிப்பு
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே அ.தி.மு.க.
சார்பாக திடீரென ஆ.ராசா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் ஜெகநாதன் உட்பட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்தும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் உருவபொம்மை எரித்ததாக ராஜசேகர் உட்பட 7 பேரை கைது செய்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.