போஸ்டர்களில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி படங்கள் இடம்பெற ரஜினி மன்றம் தடை
1 min readRajini forum bans Tamilruvi Maniyan and Arjuna Murthy pictures on posters
9/12/2020
ரஜினி மன்ற போஸ்டர்களில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி படங்கள் இடம் பெறக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரஜினி ஆலோசனை
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் (ஜனவரி) புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளார். இதற்கான வருகிம் 31-ந் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே அவர் அறிவித்துள்ளார்.
ரஜினி தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியில் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் புதிய கட்சிவிரைவில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜனிகாந்த் இன்று கட்சியின் நிர்வாகிகள் தேர்வு மற்றும் கட்சியை பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளையும் ரஜினி வழங்கி உள்ளார்.
தடை
இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.
ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.