உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியிலில் ரோஷினி நாடார் பெயர்
1 min readRoshini Nadar is on the list of the most powerful women in the world
9/12/2020
உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ரோஷினி நாடார் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்று உள்ளன.
சக்திவாய்ந்த பெண்கள்
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போது 17-வது ஆண்டாக வெளியாகும் இந்த பட்டியலில் இந்த ஆண்டு, 30 நாடுகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில், ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் 3-வது இடத்தில் உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது ஆண்டாக 2வது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 32-வது இடத்தில் இருந்க்கிறார். தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் 37-வது இடத்திலும் உள்ளார்.
நிர்மலா சீதா ராமன்
இந்தியா தரப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது இடத்தில் வருகிறார். இவர் கடந்த ஆண்டு 34-வது இடத்தில் இருந்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்த பட்டியலில் இடம் பெற்று வருகிறார்.
எச்.சி.எல்., சி.இ.ஓ. ரோஷினி நாடார் 55-வது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த ஆண்டு பட்டியலில் 17 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.