May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா நோயாளிகள் வீட்டில் நோட்டீஸ் ஒட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை

1 min read

upreme Court bans corona patients from pasting notices at home

9/12/2020

கொரோனா நோயாளிகள் வீட்டில் குறிபிட்ட உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களது வீட்டு வாசலில் நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த நோட்டீசை பார்த்து அதன் அருகே யாரும் போகக்கூடாது என்பதை அறிவுறுத்த இந்த நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.
இப்டி நோட்டீஸ் ஒட்டப்படுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதில், மத்திய அரசின் தலைமை வக்கீல் துஷார் மேத்தா, ‘இந்த நடவடிக்கையை மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை என்றாலும், நோயாளிகளுடன் மற்றவர்கள் கவனக்குறைவாக தொடர்பு கொள்வதைத் தடுப்பதற்கு சில மாநில அரசுகள் தாங்களாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன,’ என்றார்.

தீண்டதகாதவர்கள்

கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டுவதால் அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் மற்றவர்களால் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

இந்த நிலையில், இன்று( புதன்கிழமை) அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கொரோனா நோயாளிகள் வீடுகளில் மாநில சுகாதாரத்துறை தரப்பில் கொரோனா பாதித்தவர்களின் அடையாளத்தை வெளியிடும் வகையில் நோட்டீஸ் ஒட்டுவது தேவையற்றது. ஒருவேளை கொரோனா பேரிடர் மேலாண்மை சட்டத்திற்குட்பட்டு உயரதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டும் நோட்டீஸ் ஒட்டலாம்,’ என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.