April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

பயனுள்ள அழகு குறிப்புகள்

1 min read

பயனுள்ள அழகு குறிப்புகள்

Useful beauty tips
  1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.
  2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
  3. தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
  4. பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
  5. துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.
  6. வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
  7. உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
  8. நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்
  9. பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
  10. முட்டையின் வெள்ளைகரு,தேன்,மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
  11. பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
  12. சருமம் உலராமல் பளபளப்புடன் இருக்க, தினமும் பசும்பாலை தேய்த்துவிட்டு குளியுங்கள்.
  13. .பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகம் , கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.
  14. எலுமிச்சை பழச்சாறு,பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
  15. பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.
  16. கொத்தமல்லி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
  17. ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.
  18. பூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.
  19. பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.
  20. சர்க்கரையுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.
  21. தாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.
  22. முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.
  23. எலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
  24. பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
  25. தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்.
  26. தயிரில் கசகசாவைச் சேர்த்து அரைத்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக பூசி வந்தால் முகம் பளப்பளப்பாகும்.
  27. முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
  28. நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
  29. அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.
  30. பலாப்பழம் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று சதை போட்டு இளமை கூடும்
  31. சம அளவு நெல்லிக்காய் சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் கருப்பாகும்.
  32. குங்குமப்பூவை பாலேட்டில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எடுத்து நன்றாக பிசைந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மாறி உதடு சிவப்பாகும்.
  33. ரோஸ்மேரி இலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி பிறகு சிறிது நேரம் வைத்திருந்து வடிகட்டி இந்த நீரை கொண்டு தலையை அலசி வந்தால் முடி உதிர்வது குறையும்.

34.சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் குறையும்.

  1. கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

36.மருதோன்றி காயை அரைத்து நகத்தில் தடவி வந்தால் நகம் வளரும்.

37.சந்தனத்தை நன்றாக பொடியாக்கி அதனுடன் பன்னீர் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

  1. வெள்ளரிக்காயை நன்கு மைய அரைத்து கரும்புள்ளிகள் மீது தடவி வைத்து நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
  2. கசகசாவைச் சிறிது எடுத்து, பாலில் ஊறவைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு குறையும்.

40 செம்பருத்தி இலையை அரைத்து சீயக்காய்த் தூளுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வர தலையில் பொடுகு குறையும்.

  1. மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சாற்றை, தலையில் தேய்த்தால் முடி உதிர்வது குறையும்.

42.தினமும் பசு வெண்ணெய்யுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் சாப்பிட்டு வந்தால் இளநரை குறையும்.

  1. .ஆலிவ் எண்ணெய்யை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கூந்தல் மின்னும்.
  2. தினமும் காலையில் தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால்
    உடல் பளபளப்பாகும்.
  3. சிறுபயறு, கடலை மாவு, தேன் கலந்து, குளித்து வர உடல் அழகு பெறும்.

46.அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்களின் கடினத்தன்மை குறையும்.

  1. ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடிஉதிர்வது குறையும்.
  2. தர்ப்பூசணி பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை கால்களுக்கு தேய்க்க கால்கள் மிருதுவாக மாறும்.
  3. தயிர், முட்டை, எலுமிச்சை சாறு கலந்து தேய்த்துக் குளிக்க பொடுகு குறையும்.

50 திராட்சை சாற்றை மசாஜ் செய்ய கழுத்திலுள்ள கருமை குறைந்து, கழுத்து அழகாகும்.

  1. பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர இதழ்கள் சிவக்கும்.
  2. தர்பூசணி பழச்சாறு, பயித்தமாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும்.

53.எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.

  1. தினமும் இரவில் புருவங்களில் ஆலிவ் எண்ணெயை தடவிக் கொண்டு படுத்தால் புருவங்கள் மிருதுவாகவும்,வசீகரமாகவும்இருக்கும்.
  2. பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.
  3. எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.
  4. கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கொண்ட கலவையை உதடு வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
  5. பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.
  6. பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகம் பிரகாசமாகும்.

60.மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலைக் கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும்.

  1. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

62 நெல்லிக்காயை பாலில் அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொதிக்க வைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

  1. துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு குறையும்.
  2. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.