June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ரஷியாவில் நடந்த சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியர் வெற்றி

1 min read

India’s Sudarsan Pattnaik wins international sand sculpture competition in Russia.

13.6.2026
ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் சர்வதேச மணல் சிற்ப போட்டி (ரஷ்யா கிராண்ட் சாண்ட் மாஸ்டர் கோப்பை 202) நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் பங்கேற்றார்.

காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு மணல்சிற்பத்தை அவர் உருவாக்கினார். சுதர்சன் பட்நாயக்கின் இந்த படைப்பு, மற்ற கலைஞர்களின் படைப்பை விட சிறப்பானதாக தேர்ந்தடுக்கப்பட்டு, முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், சர்வதேச அளவிலான போட்டிகளில் விருது பெறும் முதல் இந்திய மணல் கலைஞர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் கூறியதாவது;

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலை மையமாக வைத்து மணல்சிற்பம் உருவாக்கினேன். இப்போது ரஷிய கிராண்ட் சாண்ட் மாஸ்டர் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது. இந்த விருது எனக்கும் என் நாட்டிற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். சர்வதேச மணல் சிற்ப போட்டியை நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கும், அரசுக்கும் நன்றி.”

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *