இந்தியாவில் உருமாறிய கொரோனா 29 ஆக உயர்வு
1 min read
Transformed corona rises to 29 in India
1.1.2021
இந்தியாவில் உருமாறிய கொரோனா இதுவரை 29 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா
சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதை உலக நாடுகள் கட்டுப்படுத்தி வரும் நிலையில் இங்கிலாந்தில் கொரோனா உருமாறிய நிலை கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் சாதாரண கொரோனாவைவிட 70 மடங்கு வேகத்தில் பரவுகளிறது.
இந்த கொரோனா இங்கிலாந்தில் இருந்து டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்கா என பல நாடுகளிலும் பயணித்து இருக்கிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பலநாடுகளும் இங்கிலாந்துடனான விமான சேவையை முடக்கி உள்ளன.
29 பேர்
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கண்டறியப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நாடு முழுவதும் இதுவரை 29 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் மேலும் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.