April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

சசிகலா 27-ந் தேதி விடுதலையாகிறார்; சிறையில் கன்னடம் படித்து தேர்ச்சி பெற்றார்

1 min read

சசிகலா

Sasikala is released on the 27th; He studied Kannada in jail and passed

8.1.2021

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா உள்பட 3 பேரும் வருகிற 27-ந் தேதி விடுதலையாகிறார். சசிகலா சிறையில் கன்னடம் படித்து தேர்ச்சி பெற்றார்.

சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற அடுத்த மாதம் (பிப்ரவரி) நிறைவடைகிறது. பரோலில் அவர் வெளிவராத நாட்களை எல்லாம் கணக்கிட்டால் அவர் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே விடுதலையாவார்.

27-ந் தேதி விடுதலை

சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்த கேட்ட கேள்விக்கு, அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் பதில் கூறியது.
வருகிற 27 &ந் தேதி சசிகலா விடுதலையாவார் என்ற நிலையில் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அன்றைய தினமே விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளவரசியும் தனக்கான அபராதத்தை செலுத்திவிட்டார். ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழித்துவிட்டு பார்க்கும்போது, சுதாகரனின் தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து சுதாகரனை, அபராதம் செலுத்தியவுடன் விடுதலை செய்யுமாறு பெங்களூரு தனிக்கோர்ட்டு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் சுதாகரன் தரப்பினர் இதுவரை ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தவில்லை. சசிகலாவுக்கு முன்பு சுதாகரன் சிறையை விட்டு வெளியே வர விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் அபராதம் செலுத்துவதை அவரது தரப்பினர் தாமதிப்பதாக கூறப்படுகிறது. இளவரசியும் சசிகலாவுக்கு முன்பு வெளியே வர விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சசிகலா விடுதலை ஆகும் நாள் நெருங்கிவிட்டது.

கன்னடம் படித்தார்

சிறையில் சசிகலா கன்னடம் எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக் கொண்டுள்ளார். கன்னட தேர்வில் அவர் தேர்ச்சி பெற்று சான்றிதழை பெற்றுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் சசிகலா மீது ஊழல் தடுப்பு படையில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதாவது சிறையில் சொகுசு வசதிகளை பெற அவர் சிறைத்துறை உயர் அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சசிகலா விடுதலையாகி தமிழகம் வந்தாலும், இந்த வழக்கில் விசாரணைக்காக அவர் கர்நாடகத்திற்கு வந்து செல்ல வேண்டியது இருக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.