April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா…?

1 min read
Will the baby be born red if he eats saffron …?

பிறக்கும் குழந்தையாவது சிவப்பாக பிறக்கட்டும் என்று எண்ணி கணவனோ, மனைவியோ, அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிடாலாவது குழந்தை சிவப்பாக பிறக்காதா என்ற ஆதங்கத்தின் வெளிபாடு தான் இது. ஆனால் உண்மையில் குழந்தையின் நிறத்திற்கும், குங்குமப்பூ சாப்பிடுவதற்கும் எந்த வித சம்பந்தமமே இல்லை என்பதே உண்மை. கர்ப்ப காலத்தில் சொல்லப்படும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. ஏனெனில் பிறக்க உள்ள குழந்தையின் நிறத்தை தீர்மானிக்கும் சக்தியெல்லாம் குங்குமப் பூவிடம் அறவே இல்லை.

கர்ப்ப காலத்தில் சிலருக்கு வயிற்றை பிரட்டி கொண்டு வரும். எதை சாப்பிடாலும் உடனே வாந்தி வரும். முன்பு விரும்பி சாப்பிட்ட உணவுகள் எதுவும் தற்போது பிடிக்காது. இதனால் சத்துக்கள் நிறைந்த பாலை கண்டால் கூட சிலருக்கு அதன் பால் வாடை பிடிக்காது. மசக்கையாக உள்ள நேரத்தில் அது இன்னும் அதிகபடியாக வயிற்றைப் பிரட்டி எடுக்கும்.

பாலும் குடிக்க வேண்டும், ஆனால் வாந்தியும் வர கூடாது என்று நினைத்ததன் வெளிபாடு தான் குங்குமப்பூ. குங்குமபூவின் மணம் மற்றும் சுவையால் வெறும் பாலை குடிப்பதை விட குங்குமப்பூ கலந்த பாலை கரைத்துக் குடிக்கும் வழக்கம் வந்தது. ஆனால் அதையும் கூட குடிக்க மாட்டேன் என கூறும் பெண்களை எவ்வாறு குடிக்க வைப்பது. அதனால் தான் நம் முன்னோர்கள் தந்திரமாக யோசித்து கர்ப்பிணி பெண்களிடம், நீ குங்குமப்பூ சாபிட்டால் உன் குழந்தை சிவப்பாக பிறக்கும் என சொல்லி வைத்தார்கள். அதனால் தான் குங்குமப்பூ கலந்த பாலை குடித்தார்கள் நம் பெண்கள்.

குழந்தைக்கு நிறம் கிடைக்கும் என்ற சொக்கவைக்கும் வார்த்தையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். இன்றும் கூட கர்ப்பிணி பெண்கள் குங்கமப்பூ கலந்த பாலை குடித்து வருகிறார்கள். அப்படியாவது நம் குழந்தை சிவப்பாக பிறந்து விடாதா என்ற ஏக்கம் தான் அது. ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் குழந்தையின் நிறத்துக்கும் குங்குமப்பூ சாப்பிடுவதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. குழந்தையின் நிறத்துக்கு முழு காரணம் பரம்பரை பரம்பரையாக வரும் மரபணுக்கள் மட்டுமே.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.