May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் இருந்து சென்ற 5 சபாநாயகர்கள்

1 min read

5 Speakers who left Nellai

11.5.2021

தமிழக சட்டசபைக்கு அப்பாவு சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் நெல்லை மாவட்டம் தந்த 5-வது சபாநாயகர் ஆவார்.

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்டம் பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம்(நெல்லை, தென்காசி, தூத்துக்குடி) பல இயற்கை வளங்களை பெற்று இருக்கிறது. வற்றாத தாமிர பரணி ஆறு இந்த பகுதியில் உற்பத்தியாகி இதே பகுதியில் கடலில் கலக்கிறது. மேலும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய ஐந்து நிலப்பரப்பை உள்ளடக்கியதாக விளங்குகிறது.

இந்த பகுதியில் இருந்து இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த பூமி தமிழக சட்டசபைக்கு இதுவை 4 சபாநாயகர்களை அனுப்பி உள்ளது. தற்போது தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் அப்பாவு 5-வது சபாநாயகர் ஆவார்.

இதுபற்றிய விவரங்களை காணலாம்.

செல்லப்பாண்டியன்

நெல்லை மாவட்டம் முதலில் சபாநாயகர் ஆசனத்திற்கு அனுப்பியது செல்லப்பாண்டியன். இவர் நெல்லை மாவட்டம் மேலச்செவல் கிராமத்தில் 1913ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி பிறந்தார். நெல்லை இந்து கல்லூரியிலும் திருவனந்தபுரம்சட்ட கல்லூரியில் படித்தவர்.

இவர் 1952ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். 1962ம் ஆண்டு வெற்றி வெற்ற அவர் 1967ல் தோல்வி அடைந்தார்.

இவர் 1962ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை சட்டசபை சபாநாயகராக இருந்தார்.

இவர் சபாநாயகராக இருந்தபோது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் சமவாய்ப்பு கொடுத்தார். அவர் சபாசநாயகராக இருந்தபோது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சஞ்சீவையா தமிழகம் வந்திருந்தார். அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் விருந்து கொடுத்தார்கள். இதில் கலந்து கொள்ள செல்லப்பாண்டியனை அழைத்தார்கள். “சபாநாயகர் கட்சி சார்பாற்ற பொதுவானவர். எனவே நான் காங்கிரஸ் அளிக்கும் விருதுக்கு வரமாட்டேன்” என்று கூறிவிட்டார்.

1967ம் அண்டு காங்கிஸ் தோல்வி அடைந்தபோது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கும்படி பெருந்தலைவர் காமராஜர் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

சி.பா.ஆதித்தனார்

இவர் 1905-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தார். இந்த ஊர் அப்போது நெல்லை மாவட்டமாக இருந்தது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது.

சி.பா.ஆதித்தனாரின் தந்தை அவருடைய தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞர். சி.பா.ஆதித்தனார் தி.மு.க. அமைச்சரவையில் 1967 மார்ச் 17-ந் தேதி முதல் 1968 ஆகஸ்டு 12-ந் தேதி வரை சபாநாயகராக இருந்தார்.

இவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றவுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் இருமொழியில் பேசலாம் என்னும் விதியில் சில மாற்றங்களைச் செய்தார். இரு மொழியில் மன்றத்தில் பேசலாம் என்னும் விதி இருந்தால், பெரும்பாலானோர் ஆங்கிலத்திலேயே பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. தமிழ் அறவே தெரியாதவர் மட்டுமே ஆங்கிலத்தில் பேசலாம் என அவர் விதி வகுத்தார். சட்ட சபையில் திருக்குறறை வாசிக்கும் முறையை இவர்தான் கொண்டுவந்தார்.

பி.எச்.பாண்டியன்

பி. எச். பாண்டியனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் அருகே உள்ள கங்கெனாபுரம். இவர் 1977 முதல் 1989 வரை 3 முறை சட்ட சபை உறுப்பினராகப் பதவி வகித்தவர். இவர் 1980 முதல் 1985 வரை துணைத் தலைவராகப் பதவி வகித்தவர்.

அதன்பின் பிப்ரவரி 5-ம் தேதி 1985 முதல் எம்ஜிஆர் மறைவு வரை சட்ட சபை சபாநாயகராகப் பொறுப்பு வகித்துள்ளார். அதன்பின் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என 2ஆகப் பிரிந்தபோது ஜானகி அணியில் இடம் பிடித்தார். ஜானகி அணி சார்பாகப் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்ற ஒரே ஒரு நபர் இவர்தான்.

பி.எச். பாண்டியன் சபாநாயகராக இருக்கும்போதுதான் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருகிறது என்றும் அவரது உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும் அறிவித்தார்.

ஆர். ஆவுடையப்பன்

ஆர்.ஆவுடையன் தி.மு.க. ஆட்சியில் 2006-ம் ஆண்டு மே மாதம்19-ந் தேதி முதல் 2011 மே 21-ந் தேதி வரை சபாநாயகராக இருந்தார். இவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் சுப்பையாவிடம் தோல்வியடைந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளரான முருகையா பாண்டியனிடம் மீண்டும் தோல்வியடைந்தார்.

அப்பாவு

தற்போது சபாநாயகராக தேர்வாக இருக்கும் அப்பாவு நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியி்ல் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். அப்பாவு. தி.மு.க அமைத்துள்ள 16-வது தமிழக அரசின் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

69 வயதான அப்பாவு தன்னுடைய தொடக்க கால அரசியலைக் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கினார். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரையிடம் அப்பாவு தோற்றுப் போனதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் நடக்கும் சட்டப் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை. “அந்தத் தேர்தலில் அப்பாவுதான் வெற்றி பெற்றார்” என தி.மு.க தலைமை நம்புகிறது. கடந்த 5 ஆண்டுகளாக சட்டப்பேரவைக்கு வெளியே அவர் சட்டப்போராட்டம் நடத்தி வந்தார்.

இவர்தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளாராக 1996 தேர்தலில் வெற்றி பெற்ற அப்பாவு, அதன்பின்னர் 2001 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், தி.மு.கவில் இணைந்தவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 2011 தேர்தலில் ராதாபுரம் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு தி.மு.க விட்டுக் கொடுத்தது. இதன் பின்னர், 2016 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.