இந்தியாவில் ஒரே நாளில் 15,158 பேருக்கு கொரோனா
1 min readCorona for 15,158 people in a single day in India
16.1.2021
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,158 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பரவல் குறைந்து வருகிறது. தினமும் கொரோனா பதிவின் எண்ணிக்கையும், அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை இன்ற காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று(சனிக்கிழமை) மட்டும் 15,158 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து, 42 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 175 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,52,093 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 16,977 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்ந்து இதுவரைகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 79 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு 2,11,033 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 18 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரத்து 491 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 8,03,090 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.