தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min readDMK Admitted to General Secretary Thuraimurugan Hospital
16.1.2021
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரைமுருகன்
தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன் கடந்த சில மாதங்களாக லேசாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. கட்சி பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று வந்தாலும், அவ்வபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று ( சனிக்கிழமை) மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு என்ன உபாதை என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.