மாஸ்டர் படம் இந்தியில் ரீ மேக் ஆகிறது
1 min readThe master film is a remake in Hindi
15.1.2021
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் சினிமா இந்தி மொழியில் ரீமேக் ஆக இருக்கிறது.
மாஸ்டர்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.
இது தொடர்பாக எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறும்போது, ” ‘மாஸ்டர்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை. தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம்” என்றார்.