May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

“ரஜினி வரவிட்டால் என்ன?… நான் வருகிறேன்” ‘அர்ஜுன மூர்த்தியின் அரசியல் ஆசை

1 min read

“What if Rajini does not come? … I will come” ‘Arjuna Murthy’s political desire

28.1.2021

ரஜினியால் மக்கள் மத்தியில் அறிமுகமான அர்ஜுன மூர்த்திக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது. அவர் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கூறினார்.

ரஜனியின் அரசியல்

ரஜினியின் அரசியல் புஸ்வானமாகிவிட்டது. அரசியலுக்கு வருவேன் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன் என்று பகிரங்கமாக அறிவித்த ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி அரசியிலில் இருந்து முழுமையாக ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். இது பல ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.
ரஜினி ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று ரஜினி பெயரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சிலர் அரசியில் கடசிகளில் இணைந்து வருகிறார்கள்.
ரஜினி புதிய கட்சியை தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட போது அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர் அர்ஜுனமூர்த்தி. அபோபோல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டவர் தமிழருவி மணியன். இவர் இனி அரசியில் பற்றி பேசவே மாட்டேன் என்று சபதம் எடுத்துகொண்டுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று விமர்சித்தவர்கள் இப்போது அவரது ஆதரவு தங்களுக்கு வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

அர்ஜுனமூர்த்தி

இந்தநிலையில் ரஜினியால் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்ட அர்ஜுனமூர்த்திக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்தோடு அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம் என்றும், ரஜினியின் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்து இருந்தார்.
இப்போ புதிய கட்சியை தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அர்ஜுனமூர்த்தி அளித்த பேட்டி வருமாறு:-

புதிய கட்சி

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க புதிய படையுடன் புதிய கட்சியை தொடங்க உள்ளேன். என்னுடன் லட்சக்கணக்கான இளைஞர்களும், பல முக்கிய பிரமுகர்களும் உள்ளனர்.

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக களம் இறங்க திட்டமிட்ட ரஜினி அதற்காக பல்வேறு திட்டங்களையும் வைத்து இருந்தார்.

ரஜினி தொடங்க இருந்த கட்சிக்காக ஓராண்டுக்கு மேல் அமைத்த யூகங்களையும், திட்டங்களையும் புதிய கட்சிக்காக பயன்படுத்தப் போகிறோம். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம்.

ரஜினிகாந்தை சந்தித்து கட்சி தொடங்கும் விசயத்தை கூறினேன். அதனை ஆர்வமுடன் கேட்ட அவர் சிரித்த முகத்தோடு ஆசிர்வாதம் வழங்கினார். இருப்பினும் ரஜினிகாந்தின் படம், பெயர் ஆகியவைகளை பயன்படுத்த மாட்டோம்.
டெல்லியில் குறுகிய காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை பிடித்தது போல தமிழகத்திலும் களம் இறங்கி நிச்சயம் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.அதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம்.

மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களுடன் கைகோர்க்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.