May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் தைப்பூச விழவையட்டி திருக்கல்யாணம்

1 min read

Thaipusam festival in Thoranamalai

29.1.2021

தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச விழாவையட்டி திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தோரணமலை

தென்காசி மாவட்டம் கடையம் தோரணமலை முருகன் கோவில் உள்ளது. மலை உச்சியில் குகைக்குள் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சுனைகள் நிறைந்த இந்த மலை இயற்கை வனப்புடன் உள்ளது.


இங்கு நடைபெறும் விழாக்களில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று ( வியாழக்கிழமை) தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். சிலர் அலகு குத்தியும் வந்திருந்தனர். மேலும் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களிலும் பக்தர்கள் வந்து குவிந்தனர். தோரணமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தோரணமலை பக்தர்கள் வெளத்தில் மிதந்தது. மலையடிவாரத்தில் உள்ள விநாயகரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் சாரைசாரையாக மலைமீது பக்தர்கள் ஏறி, இறங்கியபடி இருந்தனர். சுனையிலும் பக்தர்கள் வரிசையில் நின்று புனிதநீராடினார்கள்.


தைப்பூசத்தையட்டி முருகன் திருக்கல்யாணம் நடந்தது. இதையட்டி காலையில் மலைமீதுள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து விநாயகருக்கும் உற்சவர்களான முருகன், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை அடுத்து திருக்கல்யாணம் நடந்தது. இதில் பெண்கள் வரிசை தண்டுகளை ஏந்தி வந்தது மெய்சிலிர்க்க வைத்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பக்தி பரவசத்துடன் முருகன் துதிப்பாடல்களை பாடினார்கள். திருக்கல்யாண நிகழ்ச்சிகளை சேலத்தில் இருந்து வந்திருந்த முனைவர் கணே¨ சிவாச்சாரியார், சென்னை ஈஸ்வரன் சர்மா ஆகியோர் நடத்தினார்கள்.
இதனை அடுத்து ஊட்டி படுகர் இன மக்களின் கலைநிகழ்ச்சியும் அதன்பின் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.


இரவில் வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் வாணவேடிக்கை நடந்தது.
விழாவையட்டி காலையில் இருந்து மாலை வரை பல இடங்களில் அன்னதானம் நடந்தது.


விழாவையட்டி கடையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் அவர்களின் குடும்பத்தார் மற்றும் முருக பக்தர்கள் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.