June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 13,083 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 13,083 people in a single day in India

30/1/2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,083 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 13,083 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 07 லட்சத்து 33 ஆயிரத்து 131- ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 14,808- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 9 ஆயிரத்து 160 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 137 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 147 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 824 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *