தமிழகத்தில் கொரோனா இன்று 502 ஆக குறைந்தது
1 min readIn Tamil Nadu, the corona has dropped to 502 today
1.2.2021
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 502 ஆக குறைந்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 7 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 502 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,38,842 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,363 ஆக அதிகரித்துள்ளது. இன்று இறந்தவர்கள் 7 பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 4 பேர் அரசு ஆஸ்பத்தரிகளிலும் 2 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவார்.
தமிழகத்தில் இன்று 517 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,21,947 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,554 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி
சென்னையில் இன்று மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தென்காசியில் 8 பேர், நெல்லையில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும் கன்னியாகுமரியில் 13 பேருக்கம் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.