கடையத்தில் அம்மன்கொடை இன்று தொடங்குகிறது
1 min readKadayam Amman festivel begins today
1.2.2021
கடையத்தில் பத்திரகாளியம்மன், முப்புடாதி அம்மன் கோவில் திருவிழாக்கள் இன்று தொடங்குகிறது.
பத்திரகாளியம்மன் கோவில்
தென்காசி மாவட்டம் கடையத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களாக பத்திரகாளி அம்மன், முப்புடாதி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த இரண்டு கோவில்களிலும் தை மாதம் வெகு விமரிசையாக கொண்டாபப்படும்.
இந்த இரண்டு கோவில்களிலும் ஒரே காலத்தில்தான் திருவிழா நடைபெறும். கடந்த காலங்கள் ஒன்றிரண்டு திருவிழாக்கள்தான் ஒரே காலத்தில் நடைபெறாமல் முன்பின் நடந்தது. மற்றய காலங்களில் எல்லாம் ஒரே நாளில்தான் விழா தொடங்கியது. எட்டாவது நாள் திருவிழாவின்போது பத்திரகாளிஅம்மன் கோவில் தேர்சப்பரமும், முப்புடாதி அம்மன் கோவில் தேரும் சப்&ரிஜிஸ்தர் அலுவலகம் அருகே சந்திக்கும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஒரு காலத்தில் இந்த சந்திப்பின்போது சப்&ரிஜிஸ்தர் அலுவலகம் எதிரே மந்தை வெளியில் வாணவெடிக்கைகள் நடைபெறும். தற்போது அங்கே வீடுகள் வந்துவிட்டதால் ஜம்பு நதி அருகே வாணவேடிக்கை நடத்தப்படுகிறது.
பத்திரிகாளிஅம்மன் கோவில் தேர்சப்பரம் மூலஸ்தான கோவிலுக்கு பக்தர்கள் சுமந்தே செல்வார்கள். அங்கே பாறைமீது சப்பரம் அனாசயமாக செல்வது பார்ப்பவர்களை புல்லரிக்க வைக்கும்.
எட்டாம் நாள்
இந்த ஆண்டு திருவிழாவுக்கான கால் நாட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை (26ந் தேதி) நடந்தது. 2ந் தேதி முதல்நாள் திருவிழா நடக்கிறது. இன்று பகல் பால்-குட ஊர்வலம் நடக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை தேருக்கு கால்நாட்டப்படுகிறது. வருகிற 9ந் தேதி எட்டாம் நாள் கொடை விழா நடைபெறும்.
பத்திரகாளி அம்மன் எட்டாம் நாள் கொடை விழாவை இந்த ஆண்டு 2ம் திருநாள் மண்டகபடிதாரரும், முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாவை ஒன்றாம் நாள் மண்டகபடிதாரரும் பொறுப்பு ஏற்று நடத்துகிறார்கள்.