May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அம்சங்கள்

1 min read

Features announced in the federal budget

1.2.2021

பாராளுமன்றத்தில் 2021&20-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

விவசாயக் கடன்

புதிய வேளாண் கடன்களுக்காக ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

விவசாயிகள் நலனை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய அரசு திட்டம்.

சுற்று சூழலை பாதுகாக்க அடுத்த ஆண்டு ஹைட்ரஜன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வி

டிஜிட்டல் பரிமாற்ற திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.

அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம்.

தனியார் பங்களிப்புடன், 100 சைனிக் பள்ளிகள், ஆரம்பிக்கப்படும்.

லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள் அமைக்கப்படும்.

பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவி தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு.

மின்சாரம்

கடந்த 6 ஆண்டுகளில் மின் துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.

மின் துறையில் 138 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது.

ரூ.2,000 கோடியில் 7 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னை உள்ளிட்ட 5 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்தப்படும்.
இவ்வாறு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.