கடையம் அம்மன் கோவில் ஒண்ணாம் திருவிழா
1 min readKadayam Amman Temple Ninth Festival
3.2.2021
கடையம் பத்திரகாளி அம்மன் மற்றும் முப்புடாதி அம்மன்கோவில் திருவிழா நேற்று (2.2.2021) தொடங்கியது. பத்திரகாளி அம்மன் கோவிலில் காலை பால்குட ஊர்வலம் நடந்தது. உடையார் பிள்ளையார்கோவிலில் இருந்த பால் குடம் தொடங்கியது. அங்கிருந்து கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வந்து பின்னர் ஊர்வலமாக வயல்வெளியில் உள்ள மூலஸ்தான கோவிலுக்குச்சென்றது.
அப்போது உற்சவர் பத்திரகாளி அம்மனும் மூலஸ்தான கோவிலுக்குச் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அபிஷேகம் நடந்தது.
அதன்பின் இரவு மூலஸ்தான கேரிவில் பூஜைகள் காப்புக்கட்டுதல் நடந்தது. பின்னர் சப்பரத்தில் சாமி ஊருக்குள் வந்து வீதி உலா நடந்தது. இதற்கிடையே ஊருக்குள் இரவு பூந்தட்டு நிகழ்ச்சி நடந்தது-.
முப்புடாதி அம்மன் கோவிலிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சப்பரம் வீதி உலா வந்தது.
முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் விளக்குப்பூஜை நடந்தது.