“சசிகலாவும், தினகரனும் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை” ; அமைச்சர் ஜெயக்குமார்
1 min read
“Sasikala and Dinakaran are not even basic members of the AIADMK”; Minister Jayakumar
3/2/2021
“சசிகலாவும், தினகரனும் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என்றும் பிறகு எப்படி அவர்கள் அ.தி.மு.க.வுக்கு உரிமையகொண்டாட முடியும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்க பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வாய்ப்பு இல்லை
சசிகலா தரப்பினர் அ.ம.மு.க. கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலிலும் போட்டியிட்டார்கள். அவர்கள் இப்போது அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பதை எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.
சசிகலா வருகையால் எந்த தாக்கமும் ஏற்படாது. முதல்&அமைச்சர் கூறியது போல, அதிமுக -&அமமுக இணைய 100 சதவீதம் வாய்ப்பில்லை. அமமுக கட்சி ஆரம்பித்து 3 சதவீத ஓட்டு பலத்தை வைத்திருந்தனர்.
சசிகலாவும், தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராககூட இல்லை. அவர்களால் எப்படி அ.தி.மு.க.விற்கு உரிமை கோர முடியும்?. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக ஆட்சியே இன்னும் 100 ஆண்டுகளுக்கு தொடரும்.
ஜெயலலிதாவிற்கு நினைவிடத்தில் தற்போது 2ம் கட்ட பணிகள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் சென்றுவந்தால், இடையூறு ஏற்படும். இதனாலேயே நினைவிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.