தமிழகத்தில் இன்று கொரோனா பரவல் 489 ஆக குறைந்தது
1 min readCorona distribution in Tamil Nadu has come down to 489 today
5.2.2021
-தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 489 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இன்று 2&வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் கீழே உள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( வெள்ளிக்கிழமை) 489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,40,849 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை
சென்னையில் மட்டும் இன்று 158 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 6 பேருக்கும், தென்காசி தூத்துக்குடி- மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 4 பேர் இறந்துள்ளனர்.
இன்று கொரோனாவுக்கு இறந்தவர்களில் சென்னை 2 பேரும், கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஒருவரும் அடங்குவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,379 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 506 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,24,024 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,446 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்ட வாரியாக…
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரம் மாவட்டம் வாரியாக வருமாறு:-
அரியலூர்- 3
செங்கல்பட்டு-45
சென்னை- 158
கோயம்புத்தூர்-54
கடலூர்-4
தர்மபுரி-1
திண்டுக்கல்-9
ஈரோடு-23
கள்ளக்குறிச்சி- 0
காஞ்சிபுரம் -15
கன்னியாகுமரி-2
கரூர்-1
கிருஷ்ணகிரி 0
மதுரை-9
நாகப்பட்டினம்-8
நாமக்கல்-2
நீலகிரி-5
பெரம்பலூர்-0
புதுக்கோட்டை-1
ராமநாதபுரம் -1
ராணிப்பேட்டை-3
சேலம்-9
சிவகங்கை-0
தென்காசி-1
தஞ்சாவூர்-20
தேனி-6
திருப்பத்தூர்-5
திருவள்ளூர்-35
திருவண்ணாமலை-3
திருவாரூர் -8
தூத்துக்குடி- 1
திருநெல்வேலி -6
திருப்பூர் -13
திருச்சி -20
வேலூர் -6
விழுப்புரம் -2
விருதுநகர்-6
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்- 1