May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

“தமிழகத்தில் சகிகலா தரப்பினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி”; அமைச்சர் குற்றச்சாட்டு

1 min read

“Attempt by Sakikala to cause riots in Tamil Nadu”; Minister charged

6/2/2021
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா, தினகரன் தரப்பினர் முயற்சி செய்து வருவதாக அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.

சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனைக்கு பிறகு, ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடந்த 27ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே விடுதலையானார். அவர் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது, சசிகலாவின்காரில் அ.தி.மு.க, கொடி கட்டப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என டிஜிபி திரிபாதியை சந்தித்து, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் சண்முகம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

இதற்கிடையே, சசிகலா வரும் 8 ம் தேதி சென்னை வர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்று சென்னையில் பேரணி நடத்தவும் அவர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி,ஜெயக்குமார் மற்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் டிஜிபி திரிபாதியை சந்தித்து சசிகலா சென்னை வரும் போது அ.தி.மு.க., கொடியை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என மனு அளித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மிரட்டல்

சசிகலா சென்னை திரும்புவதில் ஆட்சேபனை இல்லை. அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தக்கூடாது. 4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வரும் சசிகலா அதிமுகவுக்கு உரிமை கோருகிறார். பொது மக்கள் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்க திட்டமிடுகின்றனர். 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த சசிகலா தரப்பு முயற்சி செய்கின்றனர். யார் அதிமுகவினர் இரட்டை இலை என்பதற்கு தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்திவிட்டது.

அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. பழனிசாமி, பன்னீர்செல்வம், மதுசூதனன் நிர்வாகிகளாக இருக்கும் கட்சியே அ.தி.மு.க., என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுகின்றனர்.

கலவரத்தை ஏற்படுத்த சசி

பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் முழுக்கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., உள்ளது. தமிழகத்தில், சசிகலா தரப்பினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். கலவரத்தை ஏற்படுத்த தினகரன் உள்ளிட்டோர் சதி செய்கின்றனர். ஊரை அடித்து கொள்ளை அடித்த வழக்கில் தண்டனை பெற்றவர் சசிகலா. சசிகலா, தினகரன் தரப்பிடம் இருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என புகார் அளித்தோம். சசிகலா அதிமுக பொது செயலாளர் இல்லை. அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.