தமிழகத்தில் கொரோனா நிலவரம் 477ஆக குறைந்தது
1 min readCorona situation in Tamil Nadu has dropped to 477
6.2.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் 477 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. முன்றாவது நாளாக இன்று 500க்கும் குறைவாகவே கொரோனா பதிவாகி உள்ளது. கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (சினிக்கிழமை) 477 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,41,326 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 290 பேர் ஆண்கள். 187 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,08,461. பெண்களின் எண்ணிக்கை 3,32,831. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகும்.
தமிழகத்தில் இன்று 503 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 24 ஆயிரத்து 527 ஆக உள்ளது.
3பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் சென்னை, கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் இன்று 3 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,382 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,417 பேர் கொரேனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்று மட்டும் 254 ஆய்வகங்கள் மூலம் 53,256 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
தென்காசி
இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் 151 பேர். நெல்லை மாவட்டத்தில் 12 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.