தச்சநல்லூர் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீச்சு
1 min read
Bomb blast at Dachanallur police station
7.1.2021
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் போலீஸ் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.
போலீஸ் நிலையம்
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் கண்ணபிரான், நிபந்தனை ஜாமினுக்காக கையெழுத்திட வந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு வீசி தப்பிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.