இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி
1 min readWork to find 7 more corona vaccines in India
7.2.2021
கொரோனா வைரசுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பு மருந்துகள் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 57.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் நிருபர்களிடம் கூறியதாவது:&
7 மேலும் தடுப்பூசி
கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. கோவிஷீல்ட், கோவாக்சின் மருந்துகள் முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலும் 7 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தியா மிகப்பெரிய நாடு, மக்கள் தொகை அதிகம் என்பதால், ஒவ்வொருக்கும் கிடைக்கும் வகையில் அதிகமான தடுப்பூசிகளை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
இப்போதுள்ள சூழலில் சந்தையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி விற்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் சூழலை கட்டுப்படுத்த முடியாத நிலை கூட உருவாகலாம். எனவே, எதிர்காலத்தில் சூழலுக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் அரசு முடிவெடுக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.