இந்தியாவில் கொரோனா பரவல் 10 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது
1 min readCorona distribution in India came to less than 10 thousand
9.2.2021
இந்தியாவில் கொரோனா பரவல் 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறந்து வருகிறது. தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பரவல் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா நிலவரம் பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( திங்கட்கிழமை) ஒரே நாளில் 9,110 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,47,304 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,55,158 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 14,016 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,48,521 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா தொற்றுக்கு 1,43,625 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியா முழுவதும் 62,59,008 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று 6லட்சத்து 87 ஆயிரத்து 613 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.