சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- சென்னை காவல்துறை நடவடிக்கை
1 min read
Gangster Act on YouTuber Chavku Shankar- Chennai Police Action
12.5.2024
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.
சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில், 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை சிறை அதிகாரிகள் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.
காவல்துறையினர் குறித்த அவதூறு பேச்சு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் கைதாகியுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.