மணமகளை தொட்டு போட்டோ எடுத்தவரை தாக்கிய மாப்பிள்ளை
1 min readThe groom who touched the bride and took a photo
9.2.2021
மணமகளை தொட்டு போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன் வீடியோ வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மணமகள்
ஒரு திருமண மேடையில் மணமகனும் மகளும் நின்றிருக்க ஒரு புகைப்படக்காரர் மணப்பெண்ணை மட்டும் சுற்றிசுற்றி போட்டோ எடுத்தார். பின்னர் மணமகளின் கன்னத்தை பிடித்து போஸ் கொடுக்க கூறினார்.
இதனைப் பார்த்த மணமகன் ஆத்திரம் அடைந்து அந்த புகைப்படக்காரரை அடித்தது மட்டுமின்றி மணமேடையில் இருந்தே வெளியேறுமாறு கூறினார். மணமகனின் இந்த செயலை பார்த்து சிறிதும், வருத்தமோ, கோபமோ கொள்ளாத மணமகள் தரையில் விழுந்து வாய்விட்டு சிரிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.
திருமணக்கோலத்தில் மணமகனின் செயலால் கோபம் கொள்ளாமல் சிரிப்பை வெளிப்படுத்தியது அனைவரையும் ரசிக்க வைத்தது. ஆனால் உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் மணமகள் சிரிப்பாளா? என்ற சந்தேகம் பலருக்கும் வந்தது.
நடிகை
இப்போதுஅங்கு நடந்தது உண்மையான திருமணம் அல்ல என்பது தெரிய வந்தது. அந்த வீடியோவில் இருக்கும் மணமகள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நடிகை அனிகிரிதி சவ்ஹான் . ‘டார்லிங் பியார் சுகதா நஹி’ என்ற திரைப்படத்தில் அனிகிரிதி நடித்து வரும் நிலையில், அதில் இடம்பெற்ற காட்சி ஒன்று தான் திருமணக்கோலத்தில் மணமகள் சிரிக்கும் வைரல் வீடியோ. இதனை உறுதிப்படுத்தியுள்ள அனிகிரிதி தனக்கு திருமணமாகவில்லை என்றும், திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி ரேணுகா மோகன் என்பவரால் பகிரப்பட்டு வைரலானதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி படப்பிடிப்பின் போதும், படக்குழுவினருடனும் எடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களையும் அனிகிரிதி பகிர்ந்துள்ளார்.