இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமை-கலெக்டர் உத்தரவு
1 min readIlavarsi, Sudhakaran Property Government – Collector Order
9.2.2021
தஞ்சாவூரில் உள்ள இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசுடமை
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுடைமையாக்கப்படும் சொத்துக்களின் விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் வ.உ.சி. நகர் முதல் தெருவில், சுமார் 26 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இளவரசி மற்றும் சுதாரகரனுக்கு சொந்தமான சொத்து பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Princess, Sudhakaran Property Government & Collector Order