October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

“சீனாவுக்கு இந்தியா எந்த பகுதியையும் விட்டுக் கொடுக்கவில்லை”; பாதுகாப்பு அமைச்சகம்

1 min read

“India has not ceded any territory to China”; Ministry of Defense

12/2/2021

சீனாவுடனான ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியா எந்த பகுதியையும் விட்டுக்கொடுக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராகுல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி புதுடெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முக்கியமான பகுதிகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால் நமது நிலப்பரப்புகளை சீனாவுக்கு பிரதமர் தாரைவார்த்து கொடுத்துவிட்டார் என்பதே. பிரதமர் மோடி கண்டிப்பாக நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

கிழக்கு லடாக்கில் தற்போது பிங்கர் 3 பகுதியில் நமது வீரர்கள் நிறுத்தப்பட உள்ளதை நாம் அறிந்துள்ளோம். பிங்கர் 4 பகுதி நமக்கு சொந்தமானது. ஆனால், அங்கு இருந்து பிங்கர் 3 பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சினை நிலவி வருகிறது; தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது.
நமக்கு சொந்தமான இடத்தை சீனாவுக்கு பிரதமர் மோடி விட்டுக்கொடுத்தது ஏன்? நமது தேசத்துக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு. அதை எப்படி செய்ய வேண்டும் என்பது அவரது பிரச்சினை. என்னுடையது அல்ல.

சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார், சீனாவுக்கு பணிந்து செல்கிறார். சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

விட்டுக்கொடுக்கவில்லை

இந்த நிலையில் சீனாவுடனான ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியா எந்த பகுதியையும் விட்டுகொடுக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் இன்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாங்கோங் த்சோ பகுதியில் இந்தியப் பகுதி விரல் 4 வரை உள்ளது என்று கூறுவது முற்றிலும் தவறானது. சில தவறான தகவல்கள் மற்றும் தவறான கருத்துக்கள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன.
கிழக்கு லடாக்கில் பிங்கர் 8 இல் உள்ளது. ஆனால் விரல் 4 இல் இல்லை என்று அது தெளிவுபடுத்தியது. பாங்காங் த்சோவின் வடக்குக் கரையில் இந்தியாவின் நிரந்தர முகாம் 3 க்கு அருகில் உள்ளது, சீனாவின் விரல் 8 க்கு கிழக்கே உள்ளது. தற்போதைய ஒப்பந்தம் இரு தரப்பும் முன்னோக்கி செயல்படுவதற்கும் இந்த நிரந்தர முகாம்களை தொடர்ந்து பயன்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.