May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

“ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்”- -மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு

1 min read

“Jammu and Kashmir will be given state status in due course” – – Union Minister Amit Shah’s speech

13.2.2021

ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார்.

பாராளுமன்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதா மீது இன்று விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-

பல எம்.பி.க்கள் இந்த மசோதாவைக் கொண்டுவருவதால் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று கூறி வருகின்றனர். நான் தான் மசோதாவை தயாரித்தேன், நான் கொண்டு வந்தேன். அதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளேன்.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு -காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று மசோதாவில் எங்கும் எழுதப்படவில்லை. நீங்கள் எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்? நான் இந்த சபையில் கூறியுள்ளேன். இந்த மசோதாவிற்கும் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று மீண்டும் சொல்கிறேன்.
ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் பிரிவு ஐஏஎஸ், ஐபிஎல் மற்றும் ஐஎப்எஸ் போன்ற இந்திய சேவை அதிகாரிகளை அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் யூனியன் பிரதேச கேடருடன் இணைக்க இந்த மசோதா வகை செய்கிறது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.