May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

“இலங்கை தமிழர்களின் உரிமைகள்”- மோடி உறுதி

1 min read

“Rights of Sri Lankan Tamils” – Modi speech

14.2.2021
இலங்கை தமிழர்களின் உரிமைகள் குறித்து இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
தமிழில்…

சென்னையில் பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பேசினார். அவர் பேசும்போது
“வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழகம் என தமிழில் பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:&
எனது சென்னை பயணம் மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சென்னையில் இருந்த பல புதிய கட்டமைப்புதிட்டங்களை தொடங்குகிறோம். இந்த திட்டங்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழக விவசாயிகள் தன்னிறைவு இந்தியாவின் அடையாளமாக உள்ளனர்.

விவசாயிகளுக்கு பாராட்டு

சாதனை படைக்கும் அளவுக்கு உற்பத்தி செய்ததுடன், நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். கல்லணை கால்வாய் திட்டத்தால், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பயன்பெறும். ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்க வேண்டும். இது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல. உலகத்தின் பிரச்னை. ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்க வேண்டும்.

வண்ணாரபேட்டையில் இருந்து துவக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம், கொரோனா காலத்திலும் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்பட்டது. உள்நாட்டிலேயே ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது, தன்னிறைவு இந்தியாவிற்கு அடையாளம். மத்திய பட்ஜெட்டில் 119 கி.மீ., நீளம் மெட்ரோ ரயில் பணிக்காக 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ரெயில் பாதை மின்மயமாக்கம் டெல்டா மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமாகும். விழுப்புரம் – தஞ்சை இடையிலான 228 கி.மீ., தூர ரெயில் பாதையின் மூலம் உணவு தானியங்களை விரைவாக கொண்டு செல்ல முடியும்.

தன்னிறைவு

இந்த நாளில் புலாவாமா தாக்குதலில் நமது வீரரகளை இழந்தோம் என்பதை நாம் மறக்கக்கூடாது. பாதுகாப்பு துறையில் இந்தியா தன்னிறைவு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 2 பாதுகாப்பு வழித்தடங்களில் ஒன்று தமிழகத்தில் உள்ளது. இதில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி., – எம்.கே.ஐ.ஏ., ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைப்பதில் பெருமைப்படுகிறேன். இதில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. வாகன உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் தமிழகம், பீரங்கி உற்பத்தியின் மையமாக மாறி வருகிறது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள், வடக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. ராணுவத்தில் தற்சார்பு நிலையை ஏற்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ராணுவத்தை வலிமைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை ஐஐடியில், உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையம் அமைய போகிறது. இந்த மையம், இந்தியா முழுவதும் ஆராய்ச்சியாளர்களையும், மாணவர்களையும் ஈர்க்க போகிறது. அந்த மையம், கண்டுபிடிப்புகளில் முன்னிலை வகிக்க போவது உறுதி.சர்வதே கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா தலைமை வகிக்க போகிறது. இந்தியாவை, உலகமே எதிர்பார்க்கிறது. இது இந்தியாவின் தசாப்தம்.

இலங்கை தமிழர்கள்

இந்திய மீனவர்களை எண்ணி நாம் பெருமை கொள்கிறோம். மீன்பிடி தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடற்பாதி வளர்ப்புக்கு என தமிழகத்தில் தனி பூங்கா அமைக்கப்பட்டும். சமூக மற்றும் உள் கட்டமைப்புகளை இந்தியா விரைவாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி அளிக்க புதிய திட்டம் துவக்கம். உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்.

இலங்கை தமிழர்கள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை எனக்கு உண்டு. வளர்ச்சி பணி மூலம் இலங்கை தமிழர் பிரச்னையில் கவனம் செலுத்தி வருகிறோம்.
வடகிழக்கு இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்க 50 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்ப்பட்டுள்ளது. மலையக தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவைக்கு இந்தியா உதவி செய்துள்ளது. சென்னை – யாழ்ப்பாணம் இடையே விமான போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா கட்டி கொடுத்த யாழ்ப்பாணம் கலாசார மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இலங்கை தமிழர்களின் உரிமைகள் குறித்து இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். தமிழர்கள், சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்.

மீனவர்கள் விடுதலை

நமது மீனவர்கள் நீண்டகாலமாக பிரச்னை சந்தித்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்கும் என உறுதி அளிக்கிறேன். இலங்கை அரசால், மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்துள்ளோம். 1,600 மீனவர்களை மீட்டுள்ளோம். தற்போது இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் இல்லை. மேலும் மீனவர்களில் 312 படகுகள் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான உலகின் போரை இந்தியா வலுப்படுத்திவருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உதவுகின்றன. உலகம் இதனை தான் இந்தியாவிடம் எதிர்பார்த்தன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.